மோசமான ஆட்டம் ஆடிய பெங்களூரு... டக் அவுட்டான விராட் கோலி : ஈஸியாக ஜெயித்த ஹைதராபாத்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி எளிதாக வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 36வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பெங்களுரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி இப்படி ஒரு மோசமான ஆட்டத்தை ஆடும் என ரசிகர்கள் கனவு கண்டிருக்க மாட்டார்கள். ஒவ்வொரு சீசனிலும் மோசமான சாதனையை படைக்கும் அந்த அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் கம்பேக் கொடுத்ததாக நினைத்தார்கள்.
ஆனால் தாங்கள் இன்னும் மாறவில்லை என்பதுபோல பெங்களூரு வீரர்கள் ஒருவர் கூட நிலைத்து நிற்கவில்லை. அதிகப்பட்சமாக பிரபுதேசாய் 15, மேக்ஸ்வெல் 12 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஹைதராபாத் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
#ViratKohli? ko aise dekh kar dil sach me dukhta hai...
— Halla_Bol_De (@Halla_Bol_De) April 23, 2022
But he is champion and will come back strongly..#RCBvSRH #SRH #RCB #DineshKarthik #HardikPandya #IPL2022 pic.twitter.com/96jpTjHHnb
இதனால் 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் மார்கொ ஜன்சன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெகதீஷா 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா பெங்களூரு பந்து வீச்சை வெளுத்தெடுத்தார். 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவர் அவுட்டாக 8 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.