மும்பை அணியின் வெற்றிக்கு தடையாக அமைந்த 7 பந்துகள் - மாஸ் காட்டிய புவனேஸ்வர் குமார்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வெற்றிக்கு அருகில் சென்ற மும்பை அணி அதனை கோட்டை விட்டது ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பியுள்ளது.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் அணிகள் எது என்று தெரியாத வகையில் அணிகளுக்குள் பலத்த போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே நேற்று மும்பை - ஹைதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டியில் ஹைதராபாத் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி நிர்ணயித்த194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்ததால் எப்படியும் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
குறிப்பாக நடராஜன் வீசிய 18வது ஓவரில் 4 சிக்ஸர்கள் பறந்ததால் ஹைதராபாத் அணி ரசிகர்களுக்கு தோல்வி பயம் தொற்றியது. ஆனால் 19வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதுடன் அந்த ஓவரை மெய்டனாக மாற்றினார்.
இதனால் கடைசிஓவரில் 19 ரன்கள் தேவைப்பட நிலையில் மும்பை அணி கடைசி 3 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தும் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan
