3 ரன்களில் மீண்டும் தோற்றுப்போன மும்பை ... வெறுத்துப் போன ரசிகர்கள் ...
ஹைதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோற்றதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் அணிகள் எது என்று தெரியாத வகையில் அணிகளுக்குள் பலத்த போட்டி நிலவி வருகிறது. இன்று நடைபெற்ற 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதி 76, ப்ரியம் கார்க் 42, நிக்கோலஸ் பூரன் 38 ரன்களும் விளாச 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட மும்பை அணி தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ரோகித் சர்மா 48, டிம் டேவிட் 46,இஷான் கிஷன் 43 ரன்களும் எடுத்த மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.