கொல்கத்தாவை புரட்டி எடுத்த ராகுல் திரிபாதி - மார்க்ரம் கூட்டணி : 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 25 வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா 54, ஆண்ட்ரூ ரஸல் 49 விளாசினர்.
இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து 176 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ராகுல் திரிபாதி - மார்க்ரம் ஜோடி கொல்கத்தா பந்து வீச்சை சரமாரியாக விளாசி தள்ளினர்.
இருவரும் அரைசதம் கடந்த நிலையில் திரிபாதி 71 ரன்களில் ஆட்டமிக்க, மார்க்ரம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். இதனால் 17.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.