குஜராத் அணியை அசால்ட்டாக டீல் செய்த ஹைதராபாத் - 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
குஜராத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
நவி மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 50, அபினவ் மனோகர் 35 எடுத்தனர். ஹைதராபாத் அணி தனது பந்துவீச்சில் 22 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியது குஜராத் அணிக்கு சாதகமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட ஹைதராபாத் அணி குஜராத் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் வில்லியம்சன் 57, அபிஷேக் சர்மா 42, பின்னர் நிக்கோலஸ் பூரன் 34 ரன்களும் விளாச அணியின் வெற்றி எளிதானது. அந்த அணி 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இருஅணிகளும் தலா 4 போட்டிகள் விளையாடிவுள்ள நிலையில் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும் (3 வெற்றி, ஒரு தோல்வி, ஹைதராபாத் அணி 8வது இடத்திலும் (2 வெற்றி, 2 தோல்வி) உள்ளது குறிப்பிடத்தக்கது.