மைதானத்தில் கம்பீருடன் மோதல்: என் மாநிலம், குடும்பத்தை அவர் சொன்னது.. - ஸ்ரீசாந்த் குற்றச்சாட்டு!
கௌதம் கம்பீருடன் மோதல் ஏற்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.
கம்பீர்-ஸ்ரீசாந்த்
முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 தொடர்' தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் இடையேயான போட்டி நடைபெற்றது.
அப்போது மைதானத்தில் கம்பீர் - ஸ்ரீசாந்த் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மோதல் தொடர்பாக ஸ்ரீசாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "Mr. Fighter (கவுதம் கம்பீர்) உடன் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஷேவாக் பாய் உட்பட அவர் எந்த ஒரு மூத்த வீரர்களையும் மதிக்கவில்லை. என்னை மிகவும் முரட்டுத்தனமான வகையில் பேசினார்.
விளக்கம்
அதை கௌதம் கம்பீர் செய்திருக்கக் கூடாது. சக ஊழியர்களை மதிக்கவில்லை என்றால், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் என்ன பயன் இருக்கிறது? என் மாநிலம், குடும்பம் என எல்லோரும் கஷ்டப்படும் அளவுக்குப் பேசினார்.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் விராட் கோலி பற்றிக் கேட்டால் கூட அவர் பேசுவதில்லை. வேறு எதையாவதுதான் பேசுவார். நான் இன்னும் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை. நான் எந்த ஒரு கெட்ட வார்த்தை, துஷ்பிரயோகத்தையோ செய்யவில்லை. அவர் எப்போதும் எப்படி மோசமாக நடந்து கொள்வாரோ அப்படியே நடந்துகொண்டார். இதனால் மிகவும் புண்பட்டு இருக்கிறேன்” என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.