கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த ஹர்பஜன் சிங் - புகழ்ந்து தள்ளிய எதிரி வீரர்
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 350 போட்டிகளுக்கு மேல் விளையாடி அனுபவம் கொண்டவர். 41 வயதான ஹர்பஜன்சிங் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வந்த ஹர்பஜன் நீண்ட யோசனைக்கு பிறகு இந்த முடிவினை எடுத்துள்ளார்.
அவருக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், அவருடன் விளையாடிய சக வீரரான ஸ்ரீசாந்த் அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவ்வரது பதிவில், இந்திய அணிக்கு மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டிலும் நீங்கள் ஒரு முக்கியமான வீரர். உங்களுடன் நான் இணைந்து விளையாடியது மிகவும் பெருமையான விடயம். எப்பொழுதுமே உங்களது அரவணைப்பு எனது ஞாபகத்தில் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கன வே ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட மோதலில் ஸ்ரீசாந்தை ஹர்பஜன் கண்ணத்தில் அரைந்தபோது அந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன் பின்னர் அவர்கள் இருவரும் சகஜமாக பேசிக் கொண்டாலும் அவர்கள் இருவரைப் பற்றி யோசித்தாலே அந்த அரை தான் அனைவரது நியாபகத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.