கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல இந்திய அணி வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2006 ஆம் ஆண்டு கால் பதித்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் 2007 ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் முக்கிய வீரராக திகழ்ந்தாலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
ICC has been a tremendous honor. During my 25 years career as a Cricket player, I've always pursued success and winning cricket games, while preparing and training with the highest standards of competition, passion and perseverance. It has been an honor to represent my family,
— Sreesanth (@sreesanth36) March 9, 2022
ஐபிஎல் தொடரின் போது மைதானத்தில் ஹர்பஜன் சிங்கிடம் அடி வாங்கியது முதலே அவருக்கு சோதனைக் காலம் ஆரம்பித்தது. அடுத்ததாக சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய அவருக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.
சமீபத்தில் தடை முடிந்த நிலையில் . கேரள அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் மீண்டும் தடம் பதித்த ஸ்ரீசாந்த் மேகாலயா அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் அவருக்கு நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடிய ஸ்ரீசாந்த் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், அடுத்த தலைமுறையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களின் நலன் கருதி எனது முதல் தர கிரிக்கெட் கேரியரை இத்துடன் முடித்துக் கொள்ள நான் முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.