ஹர்பஜனுக்கு போட்டியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் அடுத்த கிரிக்கெட் வீரர் - யார் தெரியுமா?
நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திப் படம் ஒன்றி்l ஹீரோவாக நடித்து வரும் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் ஆகிய படங்களிலும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்துள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரீசாந்த் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.