2019ல் மோடி பேரன் ராகுல் காந்தி..2021ல் 800 ரூபாய் சிலிண்டர் 5000: தொடர்ந்து உளறி வரும் அமைச்சர் சீனிவாசன்

price gas cylinder aiadmk sreenivaasan
By Jon Mar 16, 2021 02:49 PM GMT
Report

ஒரு சிலிண்டர் விலை ரூ.4500 முதல் ரூ.5000 வரை என திண்டுக்கல் சீனிவாசன் உளறிய காணொளி வைரலாகி வருகிறது. வனத்துறை அமைச்சரும், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இதனால், கடந்த 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் உளறி வருகிறார். இந்நிலையில், தற்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பிரச்சாரத்தில் பேசும் காணொளி ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது.

இந்த திட்டத்தை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் ஒரு சிலிண்டர் ரூ.4500 முதல் ரூ.5000 வரை எனவும் 6 சிலிண்டர் வருடத்திற்கு இலவசமாக தருவதாக முதலமைச்சர் அறிவித்ததாக கூறினார். ஒரு சிலிண்டர் விலை தற்போது ரூ.800 -க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ரூ.5,000 என உளறியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டிலும் இதேபோல நரேந்திர மோடியின் பேரன் ராகுல் காந்தி என கூறி திண்டுக்கல் சீனிவாசன் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.