நிச்சயமாக அதிமுக குறைந்தது 214 தொகுதிகளில் வெல்லும்! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை
aiadmk
dindigul
Sreenivaasan
By Jon
நிச்சயமாக அதிமுக குறைந்தது 214 தொகுதிகளில் வெல்லும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது - கடந்த தேர்தலை விட நான்கு மடங்கு அதிகமாக வாக்குகள் கிடைக்கும். அதிமுக மக்களுக்கு சிறப்பான பணிகளை செய்துள்ளது. ஏறத்தாழ 17 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவி ஏற்பார். நிச்சயமாக அதிமுக குறைந்தது 214 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.