என் அம்மாவையும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாரானு கேட்டாங்க : பரபரப்பை கிளப்பிய சீரியல் நடிகை
சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக தனது அம்மாவையும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக சின்னத்திரை நடிகை கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தொலைக்காட்சி நடிகையான ஸ்ரீநிதி நிதி, சின்னத்திரை தொட்ர்கள் மூல்ம் பிரபலமானவர் , எப்போதும் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஸ்ரீநிதி நிதி சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா துறையில் காஸ்டிங் கோச் அச்சுறுத்தலை தானும் அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தனது சிறிய வயதிலே ஒரு பெரிய பட்ஜெட் பெரிய ஹீரோ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டதாகவும் அப்போதுபடத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரைப் அறிமுகப்படுத்திய ஒருவர், அட்ஜஸ்ட்மென்ட்செய்யத் தயாரா என்று கேட்டார்.
இந்த வார்த்தையை உண்மையான அர்த்தம் தெரியாத காரணத்தால் அவர்கள் கொடுக்கும் எந்த அறையையும் எடுத்துக்கொள்வேன் என்றும், உணவு மற்றும் பயணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் நினைத்துக்கொண்டு சரி என்று கூறினாராம்.
ஆனால், அந்த நபர், சினிமா துறையில் நல்ல வேடத்தில் நடிக்க பாலியல் சலுகைகளை வழங்குவதே அட்ஜஸ்ட்மென்ட் என்று கூற அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி மறுத்துவிட்டார்.
மேலும் அந்த நபர் தனக்கு விருப்பமில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் அவருக்கு பதிலாக அம்மா அட்ஜஸ்ட்மெண்ட் செய்யலாம் என்று பரிந்துரைத்ததால் அவர் மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அப்படிப்பட்டவர்களை கையாள்வதில் கவனமாக இருப்பதாக ஸ்ரீநிதி கூறியுள்ளார். ஸ்ரீநிதியின் இந்த தகவல் சின்னத்திரை, வெள்ளித்திரையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.