இந்த வெப் சீரியஸை உங்க குழந்தைகளை பார்க்க சொல்லாதீங்க : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரிட்டன்
நெட்ப்ளிக்ஸில் வெளியான ஸ்குவிட் கேம் என்ற வெப் தொடரை குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று பிரித்தானியாவை சேர்ந்த பள்ளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை போனில் கவனிப்பதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
பெற்றோர் முன்னிலையில் பாடத்தை கவனித்த குழந்தைகள் இணையத்திற்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன, அந்த வகையில், சமீபத்தில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமான கொரியன் வெப் சிரிஸ் ஸ்குவிட் கேம்.

கொரியாவின் பழமையான சில விளையாட்டுகளை வைத்து ஆட்களை கொல்வது போல உருவான கதைகளம் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த இணைய தொடரில் வரும் காட்சிகளை சிறுவர்கள் பலர் ரீ க்ரியேட் செய்து டிக்டாக் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருவதால் குழந்தைகள் நல ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரிட்டனில் உள்ள பள்ளிகள் இந்த இணைய தொடரை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.