கமலின் பிரச்சார வாகனத்தை பரிசோதித்த பறக்கும் படை அதிகாரிகள்.. திருச்சியில் பரபரப்பு.!
மக்கள் நீதி மைய தஞ்சை வேட்பாளர் சுந்தரமோகன் திருவையாறு ஐஜேகே வேட்பாளர் திருமாரன் ஒரத்தநாடு மக்கள் நீதி மையம் வேட்பாளர் என் ரங்கசாமி ஆதரித்து மக்கள் நீதி மைய தலைவர் கமல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”ஒரு ஊழல் கட்சிக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சியாக இருக்க முடியாது, இருவரும் களைய வேண்டும்.
முதல் தலைமுறை வாக்காளர்கள் சுதந்திர போராட்டத்திற்கு தயாராக வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விவசாய உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வழிச்சாலைகள் உருவாக்கப்படும். ஒரு காலத்தில் தன்னைப் போன்ற நடிகர்களை கூத்தாடி என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்பொழுது நாங்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தொழில் அதிபர்கள் வியக்கிறார்கள்.
விண்வெளிக்கு ராக்கெட் விடும் நீங்கள் முறையான பாதாள சாக்கடை அமைத்து சுத்தமான தண்ணீரை கொடுக்க முடியாதா இதற்கான மனம் உங்களிடம் இல்லை. ஏழை ஏழை என்று சொல்லி ஏழைகளை ஏழையாகவே பாதுகாத்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அப்போது தான் அவர்களுக்கு சௌகரியம்.

பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருச்சி செல்லும் வழியில் தஞ்சை தாலுகா அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் கமலின் பிரசார வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது உள்ளே எதுவும் இல்லை என தெரிய வந்ததையடுத்து வாகனம் விடுவிக்கப்பட்டது.