சிக்கலில் முன்னாள் முதலமைச்சர் : எடப்பாடி பழனிசாமி நண்பர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை
ADMK
Edappadipalanisamy
LocalBodyElection
By Irumporai
திமுக ஆட்சிக்கு வந்தவுடனே முன்பு ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது .இந்த நிலையில்,எடப்பாடி பழனிசாமி நண்பரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சேலம் அருகே பெத்தநாயக்கன் பாளையத்தில்க் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.