அரசியல் தலைவர்கள் செல்போன்கள் ஹேக்.. இந்தியால யாரெல்லாம் ? வெளியான அதிர்ச்சி தகவல்!

journalist hacked spyware pegasus
By Irumporai Jul 19, 2021 10:19 AM GMT
Report

இன்று இந்திய அரசியலையே உலுக்கி வரும் வார்த்தை, பெகாசஸ் என்ற வார்த்தைதான்  ஏன் இந்த வார்த்தை இந்திய அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது வாருங்கள் விரிவாக காண்போம்.

பெகாசஸ் என்பது என்ன:

பெகாசஸ் என்பது இஸ்ரேலை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்பைவேர் நிறுவனனான என்எஸ்ஓ உருவாக்கிய மென்பொருள்.

இது கணினி,ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவி தகவல்களை திருடக்கூடிய திறன் கொண்டது. அதாவது ஒருவரின் செல்போனிலுள்ள மைக்ரோபோனை ஆக்டிவேட் செய்து அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கக்கூடியது.

இந்த மென்பொருளை இஸ்ரேல் அரசு உதவியுடன் பெகாசஸ் நிறுவனம் உருவாக்கியது.

ஆரம்பத்தில் அரசு காரியங்களுக்கு மட்டும் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தும் என்று சொல்லப்பட்டது.

உளவு பார்க்கபட்டதா:

தற்போது தனிப்பட்ட பிரபல நபர்களின் போன் உரையாடல்களை உளவு பார்த்துவந்த தகவல் வெளியாகி இந்திய அரசியலை அதிரவைத்ததுள்ளது

. அதாவது பல்வேறு நாடுகளிலுள்ள முக்கிய ஆட்களின் செல்போன் பேச்சுவார்த்தை, புகைப்படங்கள், உள்ளிட்ட வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக திடீர் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் என்று செய்தி நிறுவனம், இந்தியாவில் இயங்கும் தி வையர் செய்தி நிறுவனத்துடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டது.

களத்தில் இறங்கிய நிறுவனங்கள்:

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்கடன் போஸ்ட், தி காரிடியன் உள்ளிட்ட 17 செய்தி நிறுவனங்களும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளன.

அந்த ஆய்வில் இந்தியா, சவுதி அரேபியா, ருவாண்டா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ஐக்கிய அரபு, எமிரேட்ஸ், மெக்சிகோ, பஹ்ரைன், ஹங்கேரி, மொரோக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேலான செல்போன் எணிகள் இருந்ததாக வையர் ஊடகம் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த 2 மத்திய அமைச்சர்கள், 3 எதிர்கட்சித் தலைவர்கள், 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், ஒரு நீதிபதி ஆகியோருடைய எணிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

திருமுருகன் காந்தி கண்காணிக்கபட்டாரா?

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உட்பட நாட்டின் பல்வேறு சமூக ஆர்வலர்களுடைய செல்போன் எண்களும் கண்காணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எண்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மையா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் மென்பொருள் நிறுவனம் தங்கள் தொழில்நுட்பத்தை பல்வேறு நாடுகளுடைய அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாத செயல் மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிக்கலில் மத்திய அரசு

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பெகாசஸ் மென்பொருள் அரசுகள் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆகவே இதில் மத்திய அரசின் தலையீடு நிச்சயமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூட இது தொடர்பாக கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் பெகாசஸ் மூலம் போன்களை ஹேக் செய்த இஸ்ரேல் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சொல்ல வேண்டும்.

அப்படி சொல்லவில்லையென்றால் வேறு வழிகளில் உண்மை வெளியாகி பாஜகவுக்கு சேதாரம் உண்டாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்

மே 17 இயாக்க ஒருங்கிணைப்பாளர் மத்திய திருமுருகன் காந்தி இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ள கருத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத பிரதமர் ஏன் பத்திரிக்கையாளர்களை ஏன் உளவு பார்க்கிறார் இதற்காக அரசு வெட்கபடவேண்டும் என கூறியுள்ளார்

. தற்போது இந்த விவகாரம் மத்திய அரசிற்கு கடும் அழுத்ததை கொடுத்துள்ளது,  தற்போது எதிர்கட்சிகளின் முக்கிய கேள்வி  இந்திய பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை உளவு பார்க்க பெகாசஸுக்கு வேலை கொடுத்தவர் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  இதற்கான பதிலை இனி வரும் காலங்களே கூறும்.