எதிர்ப்பு தெரிவித்த நாடுகள் - நடுவானில் வெடித்து சிதறிய உளவு செயற்கைக்கோள்!
வடகொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
செயற்கைக்கோள்
தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.
இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், விரைவில் தங்களது இரண்டாவது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.
வெடித்து சிதறியது
இந்நிலையில் அந்நாட்டின் வடமேற்கு விண்வெளி மையத்திலிருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஆனால், என்ஜின் கோளாறு காரணமாக ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியுள்ளது.
இதனை அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் வடகொரியாவின் இரண்டாவது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனிடையே வடகொரியாவின் ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.