வானில் பறந்த ஸ்பை பலூன் - 5 சீன நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மீது கடும் கட்டுப்பாடு விதித்த அமெரிக்கா...!
வானில் பறந்த ஸ்பை பலூன் விவகாரம் காரணமாக, 5 சீன நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் அமெரிக்கா கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
ஏவுகணை ஏவுதளத்தில் மீது பறந்த சீன உளவு பலூன்
அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள அணு ஏவுகணை ஏவுதளத்தில் மிகப்பெரிய சீன உளவு பலூன் பறந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தரையில் எந்த இழப்பும் ஏற்படாமல் தவிர்க்க அமெரிக்க அதிகாரிகள் அதை அட்லாண்டிக் பெருங்கடலில் இருக்கும்போது சுட்டு வீழ்த்த முடிவு செய்தனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன்
இதற்கிடையில், சீனா தனது எல்லையில் பறந்த பலூனுக்கு கோஸ்டாரிகாவிடம் மன்னிப்பு கேட்டது. பலூன் விமானப் பாதை அதன் அசல் திட்டத்திலிருந்து விலகியதாக சீன அதிகாரிகளால் கோஸ்டாரிகா அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று தென் கரோலினா கடற்கரையில் அமெரிக்க இராணுவ போர் விமானம் பலூனை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க போர் விமானமான எஃப்-22 ராப்டரால் ஏவப்பட்ட ஏவுகணையால் அது சுட்டு வீழ்த்தப்பட்டது.

5 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா கட்டுப்பாடு
இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் பறந்ததைத் தொடர்ந்து, 5 சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மீது அமெரிக்க அரசு நேற்று கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்த சீன விமானப் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப விற்பனை ஜோ பிடன் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டது என்று நியூயார்க் டைம்ஸ் (NYT) தகவல் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வர்த்தகத் துறை, 5 சீன நிறுவனங்களையும் ஒரு சீன ஆராய்ச்சி நிறுவனத்தையும் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த நிறுவனங்கள் இனி சிறப்பு உரிமம் இல்லாமல் அமெரிக்க பாகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்க முடியாது. இந்த நடவடிக்கை சீன அரசாங்கம் அதிக உயரத்தில் இருக்கும் பலூன்களை கண்காணிப்புக்கு பயன்படுத்தியதற்கு நேரடியான பதில் என்று NYT தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனா எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷன் 48வது ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டோங்குவான் லிங்கொங் ரிமோட் சென்சிங் டெக்னாலஜி கோ. ஈகிள்ஸ் மென் ஏவியேஷன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி குரூப் கோ. ஏவியேஷன் டெக்னாலஜி கோ, ஷாங்க்சி ஈகிள்ஸ் மென் ஏவியேஷன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி குரூப் கோ. பெய்ஜிங் நஞ்சியாங் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி கோ ஆகியவை அமெரிக்காவால் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
Actual footage of the F-22A attempting to shoot down the Chinese spy balloon. pic.twitter.com/SisolOmRQm
— Eric Daniel Kotyk (@SSgtKotyk) February 9, 2023