அந்தமான் தீவுகளில் உளவு பார்த்த மர்ம பலூன் - வெளியான அதிர்ச்சி தகவல்....!

Andaman and Nicobar Islands
By Nandhini Feb 25, 2023 11:13 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மேல் உளவு பலூன் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தமான் தீவுகளில் உளவு பார்த்த பலூன்

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் மீது இதேபோன்ற மர்ம பலூன்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த மர்ம பலூன் உளவு பார்ப்பில் ஈடுபட்டதா என்ற கேள்வி தற்போது அந்தமானில் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 2022ல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மேல் ஒரு விசித்திரமான வெள்ளைக் கோளம் தோன்றியது. அதில் "எட்டு இருண்ட பேனல்கள்" தொங்கின. இந்த பலூன்கள் சமீப ஆண்டுகளாக குறைந்தது 5 கண்டங்களில் பறக்கவிட்டுள்ளது.

இது குறித்து தைவானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கையில்,

சீன பலூன்கள் கடந்த செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022ல் அதன் எல்லையில் பறந்தன. ஜப்பான் இதற்கிடையில் நவம்பர் 2019 மற்றும் செப்டம்பர் 2021 க்கு இடையில் மூன்று "பலூன் வடிவ பறக்கும் பொருட்கள்" அதன் வான்வெளியில் கண்டுபிடித்தது. அவை "ஆளில்லா உளவு விமானம்" சீனாவால் பறக்கவிடப்பட்டது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் முப்படை ராணுவப் பயிற்சியைச் சுற்றி மர்ம பலூன் பறந்தது. சீன பலூனால் இந்தியாவும் குறிவைக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்றார்.  

spy-balloon-seen-over-andaman-islands