உளவு பலூன் விவகாரம் : என்ன எங்களுக்கே ஸ்கெட்சா ? சீனாவை எச்சரிக்கும் பென்டகன்
அமெரிக்காவின் மொண்டானா பகுதியில் அணு சக்திஏவு தளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன உளவு பலூன் விவகாரம்
இதன் காரணமாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அண்டோனி பிளிங்கன் தனது சீன பயணத்தை தள்ளி வைத்தார், மேலும் சீனாவின் உளவு பலூன் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வான்வெளியில், சீனாவின் உளவு பலூன் சென்றுள்ளது அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்ட விதிமீறல் என காட்டமாக கூறியுள்ளார்.
பென்டகன் எச்சரிக்கை
இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத்துறை சார்பில் அமெரிக்க அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில் வானத்தில் பறந்த அந்த பலூன் குடிமக்களின் பயன்பாட்டிறகாக சீனாவின் ஆராய்ச்சித்துறை சார்ந்த பலூன் இது வானிலை தொடர்பான ஆய்வுகளை மட்டுமே செய்யக்கூடியது வானியல் மாற்றம் காரணமாக கட்டுப்பாட்டை மீறி நுழைந்து விட்டதாகவும் , அமெரிக்க வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்தமைக்கு மன்னிப்பு கேட்பதாகவும் , இந்த சம்பவம் குறித்து விளக்கமளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பின் முக்கிய அமைப்பான பெண்ட்கன் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் ரைடர் கூறுகையில் : வந்த சீனாவின் பலூன் அமெரிக்காவின் வான் எல்லையினை கடந்தது , அதே சமயம் அது மக்களுக்கும் ராணுவத்திற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் விதமாக இல்லை எனக் கூறினார்.
சீனாவின் அத்து மீறல்
சீன அரசின் விளக்கம் பற்றி நன்றாக எங்களுக்கு தெரியும். ஆனால், உண்மை என்னவெனில் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது.
அது ஏற்று கொள்ளப்பட முடியாதது. இதனை நாங்கள் சீன அரசிடம் நேரடியாகவே தூதரக அளவில் உள்பட பல்வேறு மட்டங்களில் தெரிவித்து விட்டோம் என கூறியுள்ளார்.