இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: விலை எவ்வுளவு தெரியுமா?

vaccine india sputnik
By Irumporai May 14, 2021 12:10 PM GMT
Report

கொரோனா வைரசிற்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முறைப்படி இந்தியாவில் இன்று அறிகமுகம் செய்தது.

இந்தியாவில் கொரோனா வைரசிற்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே புழக்கத்தில் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, கடந்த 1-ம் தேதி ரஷ்யாவிலிருந்து முதல்கட்ட தடுப்பூசிகள் இந்தியாவில் இறக்குமதியானது. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முறையான அனுமதி நேற்று கிடைத்ததையடுத்து

, இன்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்:

இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது  ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: விலை எவ்வுளவு தெரியுமா? | Sputnik V Vaccine In Use In India

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் அதிகபட்ச சில்லரை விலை ரூ.948 ஆகவும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் ஒரு டோஸ் ரூ.995 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.