கணவன் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி கொலை செய்த கொடூர மனைவி - நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

murder husband sprinkle chili-powder மிளகாய்பொடி தூவி கணவன் கொலை
By Nandhini Feb 17, 2022 05:55 AM GMT
Report

கணவன் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி கொலை செய்த கொடூர மனைவியால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார் (42). இவர் மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சசிகலா (38). இவர்களுக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

நரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், கணவன் மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தள்ளது. அதனால், அடிக்கடி மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனையடுத்து நரேஷ்குமாரும் ராணுவத்திற்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று ராணுவத்திலிருந்து வந்த நரேஷ்குமார் மனைவியை பார்ப்பதற்காக ஆசையாக அவரது தாயார் வீட்டுக்கு நள்ளிரவு சென்றுள்ளார். ஆனால், அவர் குடிபோதையில் அங்கு சென்றுள்ளார்.

கணவன் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி கொலை செய்த கொடூர மனைவி - நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் | Sprinkle Chili Powder Husband Murder

கணவன் குடித்து வந்ததைப் பார்த்த சசிகலா கணவனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சசிகலா வீட்டிலிருந்த மிளகாய் பொடியை கொண்டு நரேஷ் கண்கள் மற்றும் உடல் முழுவதும் கொட்டியுள்ளார்.

இதனால் அலறிய நரேஷ் துடிதுடித்தார். பின்னர் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது சசிகலா உருட்டுக்கட்டையால் நரேஷ்குமாரை சராமரியாக தாக்கினார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நரேஷ் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சசிகலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.