Thursday, Apr 3, 2025

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திடீர் ஓய்வு அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

sports sania mirza Tennis Rest
By Nandhini 3 years ago
Report

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 2022 ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் இரட்டை பிரிவின் முதல் சுற்றில் தோல்வியடைந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த அவர், “இது தான் எனது கடைசி சீசன் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் வாரந்தோறும் அதை எடுத்துக்கொள்கிறேன். சீசனை என்னால் நீடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நான் விரும்புகிறேன்," என பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. என் மகனுக்கு 3 வயது ஆகிறது. அவனை கருத்தில் கொண்டு பார்த்துக்கொள்ளவேண்டும்.

இதனால், இவ்வளவு தூரம் பயணம் செய்வதால் ஆபத்தை ஏற்படுத்தும், என் உடல் தேய்ந்து, என் முழங்காலும் வலிக்கிறது. நாங்கள் தோற்றோம் என சொல்லவில்லை ஆனால், அதற்கு நேரம் எடுக்கும் நினைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.