உலக ஆண்கள் டென்னிஸ் போட்டி : டேனில் மெட்விடேவ் அபார வெற்றி

sports-tennis
By Nandhini Nov 17, 2021 03:55 AM GMT
Report

இத்தாலியின் துரின் நகரில், ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.

இப்போட்டியின் தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருக்கும் வீரர்கள் 'ரெட்' மற்றும் 'கிரீன்' என இரு அணிகளாக பிரிக்கப்பட்டு அரை இறுதிக்கான லீக் ஆட்டத்தில் விளையாடி வருகிறார்கள். இந்த ‘ரவுண்ட்-ராபின்’ முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், நேற்று ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியனான ரஷிய வீரர் டேனில் மெட்விடேவும் ஜெர்மனியைச் சேர்ந்த 3-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவும் மோதினார்கள். இந்த ஆட்டத்தில் டேனில் மெட்விடேவ் 6-3, 6-7 (3-7), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி வெற்றி அடைந்தார்.