டாக்டர் படத்தின் போது திரையரங்கில் தோனியை கொண்டாடிய ரசிகர்கள் - வீடியோ வைரலானது

sports-samugam
By Nandhini Oct 11, 2021 06:43 AM GMT
Report

திரையரங்கில் டாக்டர் திரைப்படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் தோனி, தோனி என கொண்டாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

துபாயில் சென்னை, டெல்லி அணிகள் நேற்று நடந்த போட்டிகளில் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச தேர்வு செய்தார்கள்.

இதனையடுத்து, முதலில் இயங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் சேர்த்தார்கள். டெல்லி அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் பிரித்வி ஷா 60 ரன்களும், கேப்டன் பண்ட் 51 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்று விளையாடினார்.

173 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெஸ்ஸிஸ் இருவரும் களமிறங்க 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு டு பிளெஸ்ஸிஸ் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா, ருதுராஜ் கூட்டணி 100 ரன்கள் குவித்தார்.

உத்தப்பா 60 ரன்களில் வெளியேற அவர் தொடர்ந்து இறங்கிய ஷர்துல் தாகூர், அம்பத்தி ராயுடு வந்த வேகத்தில் வெளியேற நிதானமாக ஆடி வந்த ருதுராஜ் 70 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 11 பந்தில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் கேப்டன் தோனி தோனி களமிறங்க 6 பந்தில் 1 சிக்ஸர், ஹாட்ரிக் பவுண்டரியுடன் 18 ரன்கள் விளாசி மீதம் 2 பந்து இருக்க சென்னை அணி வெற்றி அடைந்தது.

இப்போட்டியில் சென்னை வெற்றி பெற்று 9-வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியதை திரையரங்கில் டாக்டர் திரைப்படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் பார்த்து தோனி, தோனி என கொண்டாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -