விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு, விருது வழங்கி தமிழக முதல்வர் பாராட்டு

sports tamilnadu gift
By Jon Feb 10, 2021 01:58 AM GMT
Report

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக முதல்வர் விருது வழங்கி பாராட்டியுள்ளார். 2009 முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழக அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேர்வு செய்தது.

தேர்வு செய்யப்பட்ட அவர்கள் அனைவருக்கும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி சிறப்பித்துள்ளார். அத்துடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு தொகையும் வழங்கினார். இது குறித்து விருது பெற்றவர்கள் பேசுகையில், தமிழக அரசு தொடர்ச்சியாக விளையாட்டு துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசு விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து தங்களை ஊக்குவித்து வருகிறது. மேலும், தங்களுக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்தார்கள்.


Gallery