சர்வதேச ஒருநாள் போட்டி; Chasingல் மாபெரும் சாதனைப் படைத்த இந்திய அணி - ரசிகர்கள் வாழ்த்து
2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.
நேற்று ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில், முதலில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 279 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கியது.
இதனையடுத்து, 45.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
சாதனைப் படைத்த இந்திய அணி
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியில் Chasingல் 300 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. தற்போது சமூகவலைத்தளங்களில் இந்திய அணிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.