ஹாக்கி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி

sports Hockey
By Nandhini Dec 18, 2021 04:40 AM GMT
Report

5 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பந்தாடியது. இதன் மூலம் 3 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்றுள்ளது.

தென் கொரியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 2-0 என்ற முன்னிலையிலிருந்து 2-2 என்று ட்ரா செய்த இந்திய அணி வங்கதேசத்தை அடுத்தப் போட்டியில் வென்று தற்போது பாகிஸ்தானையும் 3-1 என்று வீழ்த்தியுள்ளது.

இந்திய அணி, 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது. வரும் ஞாயிறு அன்று ஜப்பான் நாட்டை எதிர்கொள்கிறது இந்தியா.

கடந்த 2018ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக 2018ம் ஆண்டு அந்தப் போட்டி கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களை அடித்தார். நடப்பு தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். மொத்தம் 4 கோல்களை இந்த தொடரில் அவர் பதிவு செய்திருக்கிறார். 

ஹாக்கி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி | Sports Hockey