ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : பட்டைய கிளப்பிய இந்தியா அணி அசத்தல் வெற்றி
sports
By Nandhini
ஒடிசாவில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, 13க்கு 1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி அசத்தியுள்ளது.
புவனேஸ்வரத்தின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவும், கனடாவும் பலப்பரீட்சை நடத்தியது. தொடக்கத்திலிருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அடுத்தடுத்து கோல் மழையில் நனைந்தது.
துணை கேப்டன் சஞ்சய் மற்றும் அரஜித் சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து அசத்தினார்கள். இந்திய அணி 13 கோல்கள் அடித்த நிலையில், கனடா ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்து தோற்றியை தழுவியுள்ளது.