‘என் நண்பன் போல... யாரு மச்சான்... ’ வைரலாகும் தோனி - யுவராஜ் சிங் சந்திப்பு வீடியோ

Nandhini
in கிரிக்கெட்Report this article
இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பான அதிரடி வீரரான யுவராஜ் சிங் 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்கள் ஒருவர் யுவராஜ் சிங். இவர் 2011ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டார். இதனால், சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
இதனையடுத்து, அவரால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதைத்தொடர்ந்து 2019ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.
எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் ஒரு பதிவை செய்திருந்தார். அதில், “கடவுள் தான் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறார். மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் வரும் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் களத்திற்கு வருவேன்” எனப் பதிவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு விளம்பர படம் ஒன்றில் நடிக்க சென்றிருக்கிறார். அப்போது அவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்தார்.
மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் நீண்ட நாள் நண்பர்கள். இவர் இருவரும் பல முறை பார்ட்னர்ஷிப் செய்து இந்திய அணிக்கு நல்ல ஃபினிஷிங்கை தந்தவர்கள். மேலும் தோனியின் கேப்டன்ஷிபில் யுவராஜ் சிங் 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3077 ரன்கள் அடித்து அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இரு நண்பர்களும் இணைந்துள்ள படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சந்திப்பு தொடர்பாக யுவராஜ் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியாக பதிவிட்டிருக்கிறார்.
யுவராஜ் சிங் மீண்டும் களத்திற்கு வருவேன் என்ற கூறிய பிறகு இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. யுவராஜ் சிங் பயிற்சியாளராக களமிறங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Yuvraj Singh's latest Instagram story:#Yuvi #MSD pic.twitter.com/FdCWaR2tkF
— StumpMic Cricket (@stumpmic_) December 6, 2021