நான் வாழ்க்கையில் அவ்ளோ கஷ்டப்பட்டேன்.. இப்போ சொகுசாக வாழ்கிறேன்.. - ரொனால்டோவின் காதலி உருக்கம்

interview girlfriend cristiano-ronaldo
By Nandhini Jan 11, 2022 10:15 AM GMT
Report

கால்பந்து விளையாட்டில் பிரபல வீரர் ரொனால்டோவின் நெருங்கிய பெண் தோழி ஒரு டாக்குமெண்ட்ரிக்காக தான் பட்ட கஷ்டத்தை பகிர்ந்துள்ள செய்தி நெகிழ்வை ஏற்படுத்தி இருக்கிறது.

கால்பந்து விளையாட்டில் கொடிக்கட்டி பறக்கும், இந்த தலைமுறையின் ஆதர்ஸ நாயகராக வலம் வருபவர் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, எழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரொனால்டோ தன்னுடைய கால்பந்து மூலம் மட்டுமல்லாமல், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். கடந்த 2010ம் ஆண்டு முதல் சுமார் 5 வருடம் இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில், 2015ம் ஆண்டு இரினாவுடனான உறவை முறித்துக் கொண்டார்.

இதனையடுத்து, 2016-ம் ஆண்டிலிருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழகத் தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். அர்ஜென்டினாவை பூர்விகமாக கொண்டவர் ஜார்ஜினா, பிறகு, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் குடியேறினார்.

ரியல் மாட்ரிட் அணிக்காக ரொனால்டோ விளையாடும்போது, உள்ளாடை மாடலிங் செய்து வந்த ஜார்ஜியாவுக்கு, ரொனால்டோவின் நட்பு கிடைத்தது. அதிலிருந்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணம் செய்யாமல் ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் குடும்பம் நடத்தி வரும் ரொனால்டோ.

இதனையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு அலானா மார்ட்டினா என்ற குழந்தை பிறந்தது. இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் விரைவில் இரட்டை குழந்தை பெற்றெடுக்கப் போகிறேன் என ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூகவலைத்தளம் ஒன்றில் ஜார்ஜினாவை வைத்து டாக்குமெண்டரி படம் எடுத்தது. ஜார்ஜினா ரோட்ரிக்ஸின் டாக்குமென்டரி ஜனவரி 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதில், தான் மிகவும் கஷ்டமான நிலையிலிருந்து, தற்போது சொகுசான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளேன் என்பதை விவரித்திருக்கிறார்.

அதில், 'கிறிஸ்டியானோ ரொனால்டோவை சந்தித்த நாளிலிருந்து என்னுடைய வாழ்க்கை மாறியது. செர்ரானோவில் நான் முன்னதாக கைப்பை விற்றுக் கொண்டிருந்தேன். தற்போது அவற்றை வாங்கி குவித்து வருகிறேன்.

முதலில் மிகவும் குறைந்த வாடகையில் மலிவான பிளாட் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். மாத வாடகை என்னுடைய பட்ஜெட் 250 யூரோவிற்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

கடைசியாக ஒரு பிளாட்டில் ஸ்டோரேஜ் ரூம் கிடைத்தது. குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருக்கும். கோடைக்காலத்தில் சமாளிக்க முடியாத அளவில் வெப்பமாக இருக்கும். எப்போதும் நாம் எங்கிருந்து வந்தமோ, அந்த பாதையை மறந்து விடக்கூடாது. இது மிகவும் முக்கியமானது. குழந்தைகளை நினைக்கும்போதெல்லாம் உணர்ச்சிவசப்படுவேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.