இந்திய அணி இதை செய்தே ஆக வேண்டும்... இல்லைனா ரொம்ப கஷ்டம்... - வாசிம் அக்ரமின்
டி-20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ள அணியாக மதிப்பிடப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் அடைந்த படுதோல்விகளால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் படுதோல்வி அடைந்து வெளியேறியது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆடியது.
அப்போது இந்திய ஆடிய விதம், உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இல்லாத அணியாக இல்லை. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் படுமோசமாக ஆடி சொதப்பியது. ஷாஹீன் அஃப்ரிடியின் முதல் 2 ஓவர்களிலேயே இந்திய அணியின் மொத்த நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.
அமீரகத்தில் இந்த ஆண்டு நடந்த டி-20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி-20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.
இந்நிலையில், இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடுவதற்கு வாசிம் அக்ரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம், இந்திய அணி வீரர்கள் ஐபிஎல்லை தவிர வேறு லீக் தொடர்களில் ஆடுவதில்லை. வெளிநாட்டு லீக் தொடர்களிலும் ஆடினால், பல்வேறு நாட்டு பவுலர்களை, வெவ்வேறு கண்டிஷன்கள் மற்றும் பிட்ச்களில் எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து விடும்.
அது பெரியளவில் இந்திய அணிக்கு உதவி செய்யும். பொருளாதார அளவிலும், திறமையின் அடிப்படையிலும் ஐபிஎல் தான் நம்பர் 1 லீக் தொடர் என்றாலும், உலகளவில் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஒன்றிரண்டில் ஆடுவது இந்திய அணிக்கு நல்லது என்று வாசிம் அக்ரம் ஆலோசனை கூறி இருக்கிறார்.
பிசிசிஐ இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிப்ப கிடையாது. இதனால்தான் வாசிம் அக்ரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.