இதுக்கும் மேல எங்கள் கோலிக்கு பிரஷர் குடுக்காதீங்க.. டக்குனு ‘அந்த’ முடிவை எடுத்திருவாரு - ரசிகர்கள் கொந்தளிப்பு

fans virat kohli twitter viral sports-cricket
By Nandhini Jan 16, 2022 10:03 AM GMT
Report

விராட் கோலி டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தலை சிறந்த கிரிக்கெட் வீரரான கோலிக்கு தற்போது நடக்கும் சம்பவங்களை குறிப்பிட்டு பல்வேறு ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். 2014ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கோலி முதல் முறையாக தலைமையேற்று வழி நடத்தினார்.

பின்னர், கேப்டனாகவே கோலி பதவியில் தொடர்ந்தார். கடைசியாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் டெஸ்டில் கேப்டனாக விளையாடினார். இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமது கேப்டன் பதவி விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

ஒரு ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில், கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகல் குறித்து கிரிக்கெட் ரசிகர்களின் கருத்துக்களை அப்படியே பார்ப்போம். கேப்டன்ஷிப் போனா கூட பரவால்ல.. இதுக்கும் மேல கோலிக்கு பிரஷர் குடுத்துறாதீங்க, கோபக்காரன்.. டக்குனு ரிட்டையர் ஆகுறேன்னு சொல்லிட்டு போயிடுவாரு, அவரு பண்ணுன அவ்ளோ சாதனைக்கு வேற கிரிக்கெட் போர்டா இருந்துருந்தா இந்நேரத்துக்கு சிலையே வச்சுருப்பாய்ங்க.. நீங்க என்னடான்னா.. இப்படி பண்ணீட்டீங்களேப்பா.

இன்னொரு ரசிகர் கூறுகையில், கிரிக்கெட்டில் சாதனைகளை செய்த கபில்தேவ், அசாருதீன், தோனி, போன்றவர்களை பெரும் அவமானத்துடன்தான் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்துள்ளது. இதில் கோலி மட்டும் விதிவிலக்கா என்ன?.. கோலி தொடர்ந்து ஆட வேண்டும், எல்லா சாதனைகளையும் அடித்து நொறுக்கும் வரை ஆட வேண்டும் என்றார்.

இன்னொரு கோலி ரசிகர் ட்விட்டரில் கூறும் போது, சிங்கம் இல்லாத காடு எவ்வளவு வெறிச்சோடிக் காணப்படுமோ, அதைவிட ஒருபடி மேலாக, கோலி கேப்டனாக இல்லாத டெஸ்ட் கிரிக்கெட், இனி களையிழக்கப் போகிறது என்றார்.