‘அய்யோ... நான் 'பேட்' எடுக்கும்போதா இப்படி நடக்கணும்?’-ரெடி ஆன 'கோலி'.. அடுத்த கணமே நடந்த சோதனை
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே கோலி பேட்டிங் செய்வதற்காக தயாரான போது நடந்த சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 12 ரன்களுடன் முதல் ஆளாக, அவுட்டாகி வெளியேறினார். இதனையடுத்து, புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, அடுத்ததாக களமிறங்க வேண்டி, விராட் கோலி டிரெஸ்ஸிங் ரூமில், தயாராகிக் கொண்டிருந்தார். பேட்டிங் செய்வது போலவும் சைகை செய்து கொண்டிருந்தார்.
அவர் அப்படி செய்த 2வது பந்திலேயே, ரபாடா பந்து வீச்சில், மயங்க் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு பிறகு களமிறங்கிய கோலி, புஜாராவுடன் இணைந்து ஓரளவுக்கு சிறப்பான பார்ட்னர் ஷிப்பை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்செயலாக நடந்த இந்த சம்பவ வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
— Sunaina Gosh (@Sunainagosh7) January 11, 2022