ஒருநாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? தேர்வுக்குழு எடுக்கப்போகும் முக்கிய முடிவு

sports-cricket virat-kohli Selection Committee
By Nandhini Dec 02, 2021 09:43 AM GMT
Report

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு ரஹானே, புஜாரா இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ நிச்சயம் தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று தெரிகிறது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா என்பது இந்த வாரத்தில் தகவல் வெளியாகி விடும்.

தென் ஆப்பிரிக்கா தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்ய சேத்தன் சர்மா தலைமை அணித்தேர்வுக்குழு கூட இருக்கிறது. ஒமைக்ரான் கொரோனா புதிய உருமாறிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனையடுத்து, தென் ஆப்பிரிக்க தொடர் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘தென் ஆப்பிரிக்கா தொடர் நடைபெறும்’ என்று அறிவித்திருக்கிறார். 2022-ம் ஆண்டு டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை இருப்பதால் அந்தத் தொடருக்கு முன்பாக டி20 தொடர்கள் நிறைய இருக்கிறது. இதனால், அடுத்த 7 மாதங்களில் 9 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளே ஐசிசி காலண்டரில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் தலா 3 ஒரு நாள் போட்டிகள் வீதம் 6 போட்டிகள் இதில் நடைபெறுகின்றன. தென் ஆப்பிரிக்காவிலும் பயோ-பபுள் கோவிட் பாதுகாப்பு வலையம் இருக்கும் என்பதால் ஒரே ஒரு பெரிய அணியாகத் தேர்வு செய்து அனுப்பவே அதிக வாய்ப்பு இருக்கிறது. அனைத்து வடிவங்களுக்குமான 20-23 வீரர்கள் தேர்வு செய்து அனுப்பப்படுவார்கள் என்றே தெரிகிறது.

இந்த ஆண்டு சில ஒருநாள் போட்டிகளே இருப்பதால் கோலியையே கேப்டனாகத் தொடரச் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால், 2023 உலகக்கோப்பைக்கு இப்போது முதலே தயாராவதற்காக ரோகித் சர்மாவிடம் கேப்டன்சி கொடுக்கப்படலாம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த வாரத்தில் சேத்தன் சர்மா தலைமை அணித்தேர்வுக்குழு கூடி தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அணியைத் தேர்வு செய்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு ரஹானே, புஜாரா இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ நிச்சயம் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்று தெரிகிறது. ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரீகர் பரத், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சிராஜ், ஷர்துல் தாக்கூர் மேலும் சில புது முகங்கள் சேர்க்கப்படலாம் என்று தெரிய வருகிறது.

ஒருநாள் அணி கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? தேர்வுக்குழு எடுக்கப்போகும் முக்கிய முடிவு | Sports Cricket Virat Kohli Selection Committee