Thursday, May 29, 2025

பிசிசிஐ கொடுத்த சூப்பர் ஆஃபர் - ஏற்க மறுத்த விராட் கோலி? நடந்தது என்ன?

resignation virat kohli sports cricket bcci offer
By Nandhini 3 years ago
Report

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகி உள்ளார். ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டார். தோனிக்கு பிறகு இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் வலம் வந்தார் விராட் கோலி.

ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து தன்னை நீக்கியதால் அதிருப்தியில் இருந்த விராட் கோலி, திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகி உள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகும் முடிவை ஒருநாளைக்கு முன்பாகவே அணி வீரர்களிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். அதன் பின்பு, பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி இதுவரை 99 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார். அடுத்து அவர் ஆடும் போட்டி அவரது 100வது டெஸ்ட். இந்திய அணி அடுத்ததாக இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.

பிப்ரவரி மாதத்தின் பிற்பாதியில் இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற உள்ளது.

பெங்களூருவில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிதான் விராட் கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிவரும் விராட் கோலிக்கு பெங்களூரு 2வது வீடு போன்றது.

எனவே பெங்களூருவில் அவர் ஆடும் 100வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்திவிட்டு, அத்துடன் கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்ற ஆஃபரை பிசிசிஐ கோலிக்கு அளித்திருக்கிறது. ஆனால் அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று விராட் கோலி அந்த ஆஃபரை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.