கோலியை முதன்முதலாக ‘குறி’ வைத்த டீம் இதுதானாம் - அவரே சொன்ன ரகசியம்
கடந்த ஐபிஎல் தொடருடன் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களில் உச்சபட்ச சம்பளமாக 17 கோடி ரூபாயை விராட் கோலி வாங்கி வருகிறார்.
இந்த முறையும் பெங்களூரு அணி அவரை தக்க வைத்திருக்கிறது.
பெங்களூரு அணியில் இடம்பெற்றது குறித்து முதல்முறையாக விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர், ‘முதலில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிதான் ஆரம்பத்தில் என்னை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டியது. ஆனால் இறுதி நேரத்தில் பெங்களூரு அணியால் நான் வாங்கப்பட்டேன்.
இல்லையென்றால் முதல்முறையாக டெல்லி அணிக்காக ஆடும் வாய்ப்பு தான் கிடைத்திருக்கும்.
அதேபோல், டெல்லி அணி தங்களது பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் வகையில் என்னுடன் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் சங்வானை ஏலத்தில் எடுத்தது. 19 வயதுக்குட்பட்டோருக்கான எங்களது அணியில் பெஸ்ட் பவுலர் அவர்தான். ஆர்சிபி அணி என்னை ஏலத்தில் எடுத்ததை என் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தருணமாக பார்க்கிறேன் என்றார்.