விராட் கோலி வந்துவிட்டால்... கத்தி யார் மேல் விழும்? - ஜாஃபரின் கொடுத்த பரிந்துரை

கான்பூர் டெஸ்ட் முடிவு 5ம் நாளான இன்று தெரிந்து விடும். இது நிச்சயம் நியூசிலாந்துக்கு மிகவும் கடினம்தான். பிட்ச், அம்பயரிங்கை எதிர்த்துப் போராடுவது கடினமான விஷயம்.

இந்நிலையில், மும்பையில் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு கோலி வர இருக்கிறார். இதனால், யாரை தூக்குவது என்பதில் தற்போது குழப்பம் நீடித்து வருகிறது. ஷ்ரேயஸ் அய்யரை இன்னும் 10 டெஸ்ட் போட்டிகளுக்கு அசைக்க முடியாது. ரகானே, புஜாரா ஒழுங்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வேண்டும் ரஞ்சி டிராபியில் ஆட வேண்டி இருக்கும்.

இந்நிலையில், விராட் கோலி வந்துவிட்டால் யாரை எடுப்பது என்ற சந்தேகத்துக்கு வாசிம் ஜாஃபர் சுவாரஸ்யமான ஒரு ஆலோசனையை கொடுத்துள்ளார். “மாயங்க் அகர்வால் அல்லது அஜிங்கிய ரகானே இருவரில் ஒருவர் இடம் நிச்சயம் காலி.

விராட் கோலி உள்ளே வர வேண்டுமெனில் இவர்களில் யார் இருப்பது அல்லது உட்காருவது என்பதில்தான் கடைசி முடிவு உள்ளது. மெல்போர்ட்ன் டெஸ்ட் சதத்துக்குப் பிறகு ரகானே சரியாக ஆடவே இல்லை. 10-12 டெஸ்ட் போட்டிகள் ஒன்றுமே கிடையாது.

ஆனால், ரகானே மீது கத்தி விழுந்தால் அது மிகவும் கடினமான ஒரு முடிவு. ஆனால் யார் மீது கத்தி விழுகிறது என்று தெரியவில்லை. மாயங்க் அகர்வாலைத் தூக்கினால் விருத்திமான் சாஹாவை தொடக்க வீரர் ஆக களத்தில் இறக்கலாம்.

சகா ஓப்பனிங் இறங்கினால் மற்ற பேட்டிங் நிலைகளும் மாற வேண்டியது கிடையாது. இந்தியப் பிட்ச்களில் சாஹாவை இறக்கலாம் தவறு கிடையாது. தென் ஆப்பிரிக்கா தொடரிலெல்லாம் அவரை இறக்க முடியாது, இங்கு சாஹாவை இறக்கிப் பார்க்கலாம்” என்றார்.

மாயங்க் அகர்வால் 30 ரன்களை இந்த டெஸ்ட்டில் எடுத்திருக்கிறார். ரகானே 35 மற்றும் 4 ரன்கள். ஆனால் புஜாராவை ஏன் விட்டு வைக்க வேண்டும்? அவருக்குப் பதிலாக கோலியை இறக்க வேண்டியதுதான். ஆனால் சாஹா முதலில் காயத்திலிருந்து விடுபட வேண்டும், அப்போதுதான் வாசிம் ஜாஃபர் ஆலோசனை சரியாக இருக்கும். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்