இணையதளத்தில் வைரலாகும் Winning Moment..! - ரசிகர்கள் நெகிழ்ச்சி

Viral Video Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini 2 மாதங்கள் முன்

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது. இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

Winning Moment

இந்நிலையில், நேற்று நடைபெற்ற டி20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி தருணத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை பார்த்த விராட் கோலியும், ரோகித் ஷர்மாவும் உணர்ச்சி வசப்பட்டு மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தனர். அப்போது, விராட் கோலி எழுந்து ரோகித் சர்மாவை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

sports-cricket-viral-video

ரசிகர்கள் நெகிழ்ச்சி

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், இவர்களின் இருவருக்குமான பந்தம் முழுமைக்கு அப்பாற்பட்டது. இதை ரசிகர்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.