ஒரே பந்தில் 7 ரன்கள்.. நியூசிலாந்து vs பங்களாதேஷ் போட்டியில் நடந்த செம்ம காமெடியான சம்பவம் - வீடியோ வைரல்
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளின் 2வது டெஸ்ட் போட்டியில், ஒரே பந்தில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து வங்கதேச வீரர்கள் பீல்டிங்கில் காமெடி செய்தினர். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் வங்கதேச அணி விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று வரலாறு படைத்தது.
வங்கதேச டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்தாலும் போட்டிக்கு நடுவே வங்கதேச வீரர்கள் செய்துவரும் செயல்கள் சிரிப்பூட்டும் வகையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச வீரர் டெய்லர் பந்தை மிடில் பேட்டில் அடித்தார்.
ஆனால் வங்கதேச பந்துவீச்சாளர் ஆர்வத்தில் அவுட் என்று கேட்டார். நடுவர் கொடுக்கவே இல்லை. இதனால் ரிவ்யூ எடுத்து அதிலும் ஏமாற்றம் அடைந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நகைக்க வைத்தது.
இதற்கிடையில் 2வது டெஸ்ட் போட்டியின் போது, மீண்டும் ஒருமுறை வங்கதேச வீரர்கள் காமெடி செய்தார். போட்டியின் 26வது ஓவரில் நியூசிலாந்து வீரர் வில் யங் அடித்த பந்து பவுண்டரிக்கு அருகே சென்றது.
அப்போது 3 ரன்களை எடுத்து விட்டனர். அதன் பிறகு, பந்து கீப்பரிடம் வீசப்பட்டது. நியூசிலாந்து வீரர்கள் உள்ளே நிற்கும்போது, வங்கதேச கீப்பர் வேண்டும் என்றே ஸ்டம்பை நோக்கி பந்தை அடிக்க முயற்சி செய்தார்.
துரதிஸ்டவசமாக அங்கு பீல்டர்கள் யாரும் இல்லை என்பதால், பந்து நேராக பவுண்டரி சென்று விட்டது. இதனால் களத்தில் இருந்த நியூசிலாந்து வீரர்கள் சிரித்து விட்டார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் வங்கதேச விக்கெட் கீப்பர் அப்படியே சோகமாக நின்று விட்டார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரை நகைப்பூட்ட வைத்திருக்கிறது.
Meanwhile, across the Tasman Sea... ⛴️
— Cricket on BT Sport (@btsportcricket) January 9, 2022
Chaos in the field for Bangladesh as Will Young scores a seven (yes, you read that correctly!) ?#NZvBAN | BT Sport 3 HD pic.twitter.com/fvrD1xmNDd