சிஷ்யன் விராட் கோலிக்கு பேட்டிங் கற்று கொடுக்கும் குரு ராகுல் திராவிட் - வைரலாகும் புகைப்படம்

Virat Kohli Rahul Dravid sports-cricket viral-photos
By Nandhini Dec 21, 2021 09:32 AM GMT
Report

தன் பேட்டிங் உத்தியில் திணறி வரும் விராட் கோலியின் பேட்டிங்கை நெறிவழிப்படுத்தும் முயற்சியில் இந்திய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.

இதன் பலனை தென் ஆப்பிரிக்கா தொடரில் நாம் அனைவரும் பார்க்கலாம். வரும் 26ம் தேதி பாகிசிங் டேயில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாக இருந்தாலும், ஸ்பின்னாக இருந்தாலும் விராட் கோலி ஒரே மாதிரி ஆட்டமிழந்து வருகின்றார். இப்படி ஒரு பேட்டர்ன், அவுட் ஆகி வருவது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. ஸ்விங்கிங் பிட்ச்களில் வேகப்பந்து பிட்ச்களில் எல்.பி.வாய்ப்பு குறைவுதான்.

ஏனெனில் பந்துகள் எழும்பி விடும், எல்.பி. கேட்க முடியாது, கேட்டாலும் பந்து எழும்பும் என்பதால் ஸ்டம்புகளுக்கு மேல் செல்லும் என்று நடுவர்கள் அவுர் தர மாட்டார்கள் எனவே இத்தகைய பிட்ச்களில் கிரீசுக்கு வெளியே நிற்க வேண்டிய அவசியம் இல்லை. கோலி அப்படித்தான் நிற்கிறார்.

2018ம் ஆண்டு தொடரில் தென் ஆப்பிரிக்காவில் கோலி 286 ரன்களை 47 என்ற சராசரியில் எடுத்திருந்தார். செஞ்சூரியனில் அருமையான ஒரு சதத்தையும் எடுத்திருந்தார். ராகுல் திராவிட் பந்தை லேட் ஆக ஆடுபவர், அதே வேளையில் ஓவர் பிட்ச் ஆஃப் வாலி விழுந்தால் காலைப் போட்டு ட்ரைவ் ஆடி பந்துகளை 4 ரன்களுக்கு விரட்டுபவர்.

தனது பேட்டிங் கலைகளை சிஷ்யன் விராட் கோலிக்கு நிச்சயம் மாற்றுவார் ராகுல் திராவிட். இந்நிலையில், விராட் கோலியின் உத்தியில் பெரிய மாற்றம் இருக்கலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு காரணம் ராகுல் திராவிடின் இன்புட் தான். வலைப்பயிற்சியில் கோலி கடுமையாக பிராக்டீஸ் செய்து வருகிறார். நேற்று பிசிசிஐ இதன் புகைப்படங்களை வெளியிட்டது.