பவுண்டரி அடிக்காமல் 1 பந்தில் 5 ரன் அடித்து வெற்றி பெற்ற அதிசயம் - வைரலாகும் வீடியோ

sports-cricket video-viral 5 off 1 ball Miracle play
By Nandhini Feb 05, 2022 09:39 AM GMT
Report

பாகிஸ்தானில் அல் வகீல் கிரிக்கெட் லீக் தொடரில் தொடரில் அரிதினும் அரிதான ஒரு சம்பவம் நடந்தது. இப்போட்டியின் கடைசி பந்தில் ஒரு அணி பவுண்டரியே அடிக்காமல் 5 ரன்கள் அடித்து வெற்றி பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிக்ஸர் அடித்தாலோ, பவுலர் தவறு செய்தாலோ ஒழிய வெற்றி பெறமுடியாத போட்டியை, எதிரணி செய்த தவறால் ஒரு பந்தில் 5 ரன் அடித்து ஆட்டோமால் அணி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு மோசமான, காமெடியான சம்பவம் நடந்துள்ளது இதுவே முதல் முறையாகும். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -