யு-19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியில் 18 வயது தமிழக வீரர் தேர்வு - குவியும் வாழ்த்து

Tamil Nadu player sports-cricket
By Nandhini Dec 20, 2021 04:03 AM GMT
Report

யு-19 உலகக்கோப்பையை 4 முறை வென்ற இந்திய அணியில் இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதான இளம் சுழற்பந்து ஆல்ரவுண்டர் மானவ் பராக் சேர்கப்பட்டிருக்கிறார். இவர் சென்னையில் பிறந்தவர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில், 4 முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து உள்பட 16 அணிகள் பங்கேற்க உள்ளன. இப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கேப்டனாக டெல்லியைச் சேர்ந்த பேட்ஸ்மேன் யாஷ் துல்லும், துணை கேப்டனாக ஆந்திராவின் எஸ்.கே.ரஷீத்தும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 17 பேர் கொண்ட இந்த அணியில் தமிழகத்தை சேர்ந்த மனவ் பராக் இடம் பெற்றுள்ளார்.

சென்னையில் பிறந்தவரான மனவ் பராக் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டராவார். மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும்.

இந்திய ஜூனியர் அணி இதுவரை 2000, 2008, 2012, 2018ம் ஆண்டு ஜூனியர் உலகக்கோப்பையை வென்றது. 2016-ம் ஆண்டு ரன்னர்களாக வந்ததோடு பல இளம் வீரர்களை உற்பத்தி செய்து அவர்கள் இந்திய அணி வரை ஆடி வருகிறார்கள்.