Friday, Jul 25, 2025

நள்ளிரவு 1 மணிக்கு வீட்டில் ஸ்டீவ் ஸ்மித் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்ட மனைவி!

twitter Steve Smith sports-cricket
By Nandhini 4 years ago
Report

ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கம்மின்ஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து, மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தற்போது, ஸ்டீவ் ஸ்மித் தான் விளையாடும் கிரிக்கெட்டின் மீது எவ்வளவு காதலும், மரியாதையும் வைத்துள்ளார் என்பதை அவரது மனைவி டேனிஸ் வில்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், இரவு 1 மணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தனது கையில் உள்ள புதிய வில்லோ பேட்டை சோதனை செய்து வருகிறார். மைதான களத்தில் வெள்ளை ஜெர்சி மற்றும் முழு கிட்டுடன் விளையாடுவது போல, இரவு 1 மணிக்கு ஹோட்டல் பெட்ரூமில் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

கிறிஸ்துமஸ் ஈவ்னிங் குழந்தைகள் விளையாடுமே அப்படிதான்! இதற்கு கமெண்ட் செய்த ஸ்மித், சில சமயங்களில் விளையாடுவது போல் ஒரு முழுமையான உணர்வை பெற முழு கிட்டுடன் விளையாடுவது தான் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.