‘அடி தூள்... 41 வயசுலயும் மாஸ் காட்டிய பீட்டர்சன்...’ - 38 பந்தில் 86 ரன் அடித்து மைதானத்தை தெறிக்க விட்ட வீடியோ வைரல்

sports cricket sixer super play
By Nandhini Jan 28, 2022 08:20 AM GMT
Report

ஆசியா லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஆசியா லயன்ஸ் அணி 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது ஆசியா லயன்ஸ் அணி. அந்த அணியில் அதிகபட்சமாக ஆஃப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கார் ஆஃப்கான் 26 பந்தில் 41 ரன்கள் அடித்தார்.

இதனையடுத்து, 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரரான கெவின் பீட்டர்சன், தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடினார். காட்டடி அடித்த கெவின் பீட்டர்சன், 38 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 86 ரன்களை குவித்து அசத்தினார்.

பீட்டர்சனின் காட்டடியால் 13வது ஓவரிலேயே 150 ரன்கள் என்ற இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வேர்ல்ட் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி அடைந்தது.

41 வயதான கெவின் பீட்டர்சன், இந்த வயதிலும், அவர் ஆடிய காலத்தில் எப்படி ஆடினாரோ அதேபோலவே அடித்து ஆடி மிரட்டியுள்ளார். அவரது பேட்டிங்கை கண்ட ரசிகர்கள், அவர் இப்போதும் கூட ஐபிஎல்லில் ஆடலாம் என்று சமூகவலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.