‘யப்பா... என்ன விளாசல்...’ - 53 பந்துகளில் 4 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடித்து தூள் கிளப்பிய போவெல்

sixer sports-cricket super play Powell
By Nandhini Jan 27, 2022 07:58 AM GMT
Report

மேஇ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி 3-வது டி-20 போட்டியில் ரோவ்மன் போவெலின் சிக்சர்கள் மழை சதத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உள்ளது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 2-1 என்று இங்கிலாந்து வசம் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் 53 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்சர்களுடன் 107 ரன்கள் விளாச மே.இ.தீவுகள் 20 ஓவர்களில் 224 ரன்கள் குவிக்க தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தும் விடாப்பிடியாக விரட்டியது. ஆனால் 204/9 என்று முடிந்துள்ளது.

மைதானம் நெடுக இங்கிலாந்து பந்து வீச்சை விரட்டி சிக்சர் மழை பொழிந்த ரோவ்மென் போவெல், டி20யில் சதமெடுத்த 3வது வெஸ்ட் இண்டீஸ் வீரரானார். நேற்றைய தினம் ரோவ்மென் போவெலுடையதாக இருந்தது.

திகைப்பூட்டும் அதிரடியுடன் சில டச் ஷாட்களும் அவரது இன்னிங்சின் சிறப்பம்சங்களாக அமைந்தன. ஐபிஎல் ஏலத்தில் இருந்தால் பெரிய அளவில் இவர் விலை போயிருப்பார்.

இங்கிலாந்து கடைசி 4 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்து 204/9 என்று முடிந்தது. மே.இ.தீவுகள் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் அதிகபட்சமாக 59 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கிரன் பொலார்ட் 2 விக்கெட்டுகள். இந்த வெற்றி மூலம் அடுத்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள் இந்திய அணிக்கு ஒரு ஸ்ட்ராங் மெசேஜைக் கொடுத்திருக்கிறது.