இந்திய இளம் வீரருக்கு செம்ம லக்! வாய்ப்புகள் கதவை தட்டும்! யாருக்கு?

cricket sports siraj ishant
By Anupriyamkumaresan Jun 27, 2021 11:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்திய இளம் வீரருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்று கோப்பையைத் தட்டி தூக்கியது.

இந்திய இளம் வீரருக்கு செம்ம லக்! வாய்ப்புகள் கதவை தட்டும்! யாருக்கு? | Sports Cricket Siraj Ishant Player

இப்போட்டியில் இந்திய அணி படுமோசமாக செயல்பட்டதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக கேப்டன் பதவியிலிருந்து கோலி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன் வைக்கப்படுகிறது. மேலும், பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரும் படுமோசமாகப் பந்துவீச்சு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14ஆவது சீசனிலும் பும்ரா சிறப்பாகப் பந்துவீசவில்லை. இருப்பினும், இவருக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இவர் வேகத்திற்குச் சாதகமான பிட்சில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல், தான் தற்போது பார்மில் இல்லை என்பதை வெளிக்காட்டினார்.

இஷாந்த் ஷர்மா அனுபவம் வாய்ந்த வீரர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கருதப்பட்டது. இவரும் படுமோசமாகச் சொதப்பினார்.

இந்திய இளம் வீரருக்கு செம்ம லக்! வாய்ப்புகள் கதவை தட்டும்! யாருக்கு? | Sports Cricket Siraj Ishant Player

இதனால், எதிர்வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ரா, இஷாந்துக்கு மாற்றாக முகமது சிராஜ் களமிறங்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாகக் கட்டை விரலில் காயத்தை எதிர்கொண்டுள்ள இஷாந்துக்கு மாற்றாக சிராஜ் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

சிராஜ், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது சிறப்பாகப் பந்துவீசி, விக்கெட்களை குவித்து இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரால் பந்துகளை நல்லமுறையில் ஸ்விங் செய்ய முடியும். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இஷாந்துக்கு பதிலாக இவர்தான் களமிறங்குவார் எனக் கணிக்கப்பட்டது.

இந்திய இளம் வீரருக்கு செம்ம லக்! வாய்ப்புகள் கதவை தட்டும்! யாருக்கு? | Sports Cricket Siraj Ishant Player

இருப்பினும், அனுபவம் அடிப்படையில் இஷாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது இஷாந்த் காயத்தால் அவதிப்பட்டு வருதல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிராஜ் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இவர் மட்டும் இத்தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்களை குவித்தால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியும்.

இதனை மனதில் வைத்து, நல்ல பார்மில் இருக்கும் சராஜ், அதிரடியாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கி, செப்டம்பர் 14ஆம் தேதி நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.