ஷேன் வார்னே கடைசியாக பதிவிட்ட மரணச் செய்தி டுவிட் பதிவு - ரசிகர்கள் சோகம்

cricket death Player Shane-Warne ஷேன் வார்னே last-twitter-message கடைசி பதிவு ரசிகர்கள் சோகம் fan shocked
By Nandhini Mar 05, 2022 05:09 AM GMT
Report

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் திடீரென்று உயிரழந்தார்.

இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவருடைய சுழற் பந்து மந்திரம் அனைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. கிரிக்கெட் உலகில் கொட்டிக்கட்டி பறந்த ஷேன் வார்னேவின் இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வார்னே தாய்லாந்து நாட்டுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், ஷேன் வார்னின் கடைசியாக டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்திற்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில் ராட் மார் காலமான என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தான் உத்வேக். ராட் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ரோட் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், ஷேன் வார்ன் இந்த ட்வீட்டை பதிவு செய்த 12 மணி நேரத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.