ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் இதுதானாம் - வெளியான அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் திடீரென்று உயிரழந்தார்.
இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவருடைய சுழற் பந்து மந்திரம் அனைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.
கிரிக்கெட் உலகில் கொட்டிக்கட்டி பறந்த ஷேன் வார்னேவின் இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஷேன் வார்ன் தனது நண்பர்கள் 3 பேருடன் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா சென்ற இடத்திற்கு சென்றனர். அப்போது, பகல் முழுவதும் ஊர் சுற்றிவிட்டு, வார்னே நண்பர்களுடன் ஓய்வு எடுப்பதற்காக அவர்களது விடுதிக்கு சென்றிருக்கிறார்கள்.
இரவு நேரம் ஆனதால் நண்பர்கள் வார்னேவுக்காக இரவு சாப்பாட்டிற்காக காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், வார்னே வரவில்லை.
போன் செய்து பார்த்தும் அவர் போன் எடுக்கவில்லை. நெடு நேரம் காத்திருந்த பிறகு நண்பர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக வார்னே தங்கியிருந்த அறைக்கு நண்பர்கள் சென்று பார்த்தனர்.
அப்போது, வார்னே படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த மருத்துவர்கள் வார்னேவுக்கு 5 நிமிடம் சிபிஆர் சிகிச்சை அளித்தும் பலனில்லை. வார்னே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்போது வார்னே இறப்புக்கான காரணம் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. 52 வயதான ஷேன் வார்னேவின் உடல் எடை அதிகரித்துள்ளது. இதனால், உடல் எடையை குறைக்க நினைத்தார்.
இதற்காக அவர் தாய்லாந்தில் முகாமிட்டிருந்தார். உடல் எடையை குறைக்கப்போகிறேன் என்று அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இது குறித்து, வார்னே தனது டுவிட்டரில், ‘Operation shred’ ஆரம்பித்து விட்டது. பத்து நாட்களாகி விட்டது. உடல் எடையைக் குறைக்கப் போகிறேன். ஜூலை மாதத்திற்குள் இந்தப் படத்தில் இருப்பது போன்ற பழைய தோற்றத்துக்கு மாறி விடுவேன் என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம், இவர் அதிகப்படியான உடற்பயிற்சி செய்ததுதான் என்று சொல்லப்படுகிறது.
வார்னே அதிகளவில் உடற்பயிற்சி செய்ததால் உயிரிழக்கவில்லை என்றும், அவரது கிரிக்கெட் ஆசான் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ராட் மார்ஷ் உயிரிழந்த துக்கத்தில் வார்னே அதிக அளவிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்துவை உட்கொண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.