‘மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன்...’ - நடிகர் கமல் இரங்கல்

Nandhini
in கிரிக்கெட்Report this article
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் நேற்று மாரடைப்பால் திடீரென்று உயிரழந்தார்.இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவருடைய சுழற் பந்து மந்திரம் அனைத்து உலக கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. கிரிக்கெட் உலகில் கொட்டிக்கட்டி பறந்த ஷேன் வார்னேவின் இழப்பு அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வார்னே தாய்லாந்து நாட்டுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் வார்னே மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம். அவர் நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.
மந்திர சுழற்பந்து வீச்சால் நம்மை மயக்கிய ஷேன் வார்ன் எனும் கிரிக்கெட் மேதையை இழந்துவிட்டோம். அவர் நமக்களித்த தருணங்கள் நினைவில் சுழல்கின்றன.
— Kamal Haasan (@ikamalhaasan) March 4, 2022